/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம் மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்
மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்
மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்
மெய்கண்ட நாயனார் கோவிலில் வருஷாபிஷேகம்
ADDED : ஜூன் 22, 2025 01:46 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் மெய்கண்ட நாயனார் கோவிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.
பெண்ணாடம் மெய்கண்ட நாயனார் கோவிலில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமி முன்னிலையில், மெய்கண்ட நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, மெய்கண்ட நாயனார் கோவில், பிரளயகாலேஸ்வரர் கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு செண்பகம், நாகலிங்கம், விளா உள்ளிட்ட தல விருட்ச மரக்கன்றுகள் வழங்கினார். கோவில் ஆய்வாளர் திருஞானம் உடனிருந்தார்.