பல்கலை ஊழியர்கள் 2ம் நாளாக முற்றுகை
பல்கலை ஊழியர்கள் 2ம் நாளாக முற்றுகை
பல்கலை ஊழியர்கள் 2ம் நாளாக முற்றுகை
ADDED : ஜூன் 06, 2025 07:55 AM

சிதம்பரம், ; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்பளம் வழங்காததை கண்டித்து பதிவாளரை ஊழியர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கலால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோகர், ரவி உள்ளிட்டோர் தலைமையில் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து, மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் நியமிக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, 2வது நாளாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அலுவலகம் மற்றும் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.