ADDED : மார் 24, 2025 05:53 AM
புவனகிரி : மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்து டிராக்டரை பரிமுதல் செய்தனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் வெள்ளாற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கிளாவடிநத்தம் ேஷாபன்ராஜ், 35; என்பவர் டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, ேஷாபன்ராஜ் மற்றும் பொக்லைன் டிரைவர் ஆதிவராகநத்தம் கணபதி, 33; ஆகியோரை போலீசார் கைது செய்து, மாட்டு வண்டி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.