/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை
பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை
பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை
பெண்ணை மிரட்டி பணம் பறித்த இருவருக்கு வலை
ADDED : மார் 25, 2025 07:43 AM
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து, பணம், நகை பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தலை சேர்ந்தவர்கள் செல்வராசு மகன் சிவக்குமார், 23; குப்புசாமி மகன் வினோத்குமார், 23; இருவரும், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, 50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகையை பறித்துள்ளனர். தொடர்ந்து, அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண், கம்மாபுரம் போலீசில் புகார் அளித்தார். விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், வினோத்குமார் இருவரையும் தேடி வருகின்றனர்.