/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காசநோய் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் காசநோய் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்
காசநோய் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்
காசநோய் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்
காசநோய் விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்
ADDED : செப் 09, 2025 06:33 AM

கடலுார், : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில், மருந்து வணிகர்களுக்கான காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை காசநோய் அலுவலர் டாக்டர் கருணாகரன் வரவேற்றார்.
கடலுார் சரக மருந்து ஆய்வாளர் சிலம்புஜானகி பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விருத்தாசலம் சரக மருந்து ஆய்வாளர் மாசேதுங், சிதம்பரம் சரக மருந்து ஆய்வாளர் சுரேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் பாலகுமரன், மருந்து வணிகர் சங்க பிரதிநிதிகள் பிரகாஷ், குருமூர்த்தி, நடராஜன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.