/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கடலுாரில் ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : செப் 02, 2025 03:39 AM

கடலுார்: அனைத்துக் கட்சி சார்பில் திருப்பாதிரிப்புலியூரில் வரும் 3ம் தேதி நடக்க இருந்த ரயில் மறியல் போராட்டம் வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடலுார் திருப்பாப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் பெயரை கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷன் என பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூ.,-இந்திய கம்யூ., காங்.,-வி.சி., ம.தி.மு.க., மற்றும் பொது நல அமைப்பு சார்பில் நாளை 3ம் தேதி காலை 10:00 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடலுாரில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தாசில்தார் மகேஷ், டி.எஸ்.பி.,ரூபன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளாத காரணத்தால் வரும் 9ம் தேதி மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆர்.டி.ஒ., அபிநயா தெரிவித்தார்.
இதன் காரணமாக நாளை 3ம் தேதி நடக்க இருந்த மறியல் போராட்டம் 15ம் தேதிக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.