/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் இடியுடன் கூடிய மழை 50 வீடுகளில் மின் சாதனம் பழுது கடலுாரில் இடியுடன் கூடிய மழை 50 வீடுகளில் மின் சாதனம் பழுது
கடலுாரில் இடியுடன் கூடிய மழை 50 வீடுகளில் மின் சாதனம் பழுது
கடலுாரில் இடியுடன் கூடிய மழை 50 வீடுகளில் மின் சாதனம் பழுது
கடலுாரில் இடியுடன் கூடிய மழை 50 வீடுகளில் மின் சாதனம் பழுது
ADDED : செப் 09, 2025 06:28 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட இடி, மின்னல் காரணமாக திருப்பாதிரிப்புலியூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகியது.
கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. வழக்கத்தை விட அதிகளவில் சத்தம் கேட்டதால் அருகே இடி விழுந்ததாக பொதுமக்கள் நம்பினர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள சிங்கார வேல்நகர், சங்கொலி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென்று நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் மின்னல் காரணமாக மின்சாதன பொருட்கள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
சில வீடுகளில் பிளக் முழுவதும் எரிந்து கருகியது. இதுபோன்ற காரணங்களால் டிவி, பிரட்ஜ், டியூப்லைட்டுகள் போன்ற பொருட்கள் அனைத்தும் வீணாகின.
இப்பகுதியில் அடிக்கடி ைஹ ஓல்டேஜ் மின்சாரம் வருவதாக பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.