ADDED : செப் 09, 2025 06:27 AM
விருத்தாசலம் : மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரத்தை சேர்ந்தவர் சங்கரன் மகன் ராமர், 40; கடந்த 6ம் தேதி காலை 10:30 மணிக்கு மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியே சென்றவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.