/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., பதிவுமாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை: பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., பதிவு
ADDED : ஜூன் 07, 2024 06:22 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 68.4 மி.மீ., மழை பெய்தது.
கத்திரி வெயில் முடிந்தும், கடலுார் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகலில் துவங்கி இரவு வரை அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில், தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் மழைநீரில் தத்தளித்தப்படி சென்றது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8:30 மணி வரையில் பரங்கிப்பேட்டையில் அதிகபட்ச மழையாக 68.4 மி.மீ., பதிவாகியது.
பெலாந்துறை 64.2, விருத்தாசலம் 63, குப்பநத்தம் 53.8, கொத்தவாச்சேரி 51, வடக்குத்து 31, சேத்தியாத்தோப்பு 29, புவனகிரி 28, சிதம்பரம் 22, கீழ்ச்செருவாய் 19, வேப்பூர் 19, குறிஞ்சிப்பாடி 16, தொழுதுார் 14, அண்ணாமலை நகர் 6, மே.மாத்துார் 6, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 5, பண்ருட்டி 2.6, கடலுார் 1.8, லால்பேட்டை 1 மி.மீ., மழை பெய்தது.