/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் ஏற்பாடு! 3 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்குமாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் ஏற்பாடு! 3 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் ஏற்பாடு! 3 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் ஏற்பாடு! 3 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு
மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி முகாம் ஏற்பாடு! 3 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு
ADDED : ஜூன் 07, 2024 06:22 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கையாக, 3 லட்சம் காலநடைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கோமாரி எனும் நோய், கால்நடைகளை அதிகம் தாக்குகிறது. கால் மற்றும் வாய் புண் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்றவற்றால், கால்நடை வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குளிர் மற்றும் பனிக்காலங்களில் கால்நடைகளை அதிகம் கோமாரி நோய் தாக்குகிறது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் நோய் பரவுகிறது. நோய் பாதித்த கால்நடைகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றாலும் பரவுகிறது.
எனவே, கோமாரி நோயை தடுக்க ஆண்டுதோறும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலுார் மாவட்டத்தில், வரும் 10ம் தேதி முதல் ஜூலை 10 வரையில், கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தி, 3 லட்சம் கால்நடைகளுக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது. நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் நோக்கத்துடன், அதற்காக, 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் தடுக்க, ஆண்டிற்கு இருமுறை தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 4 சுற்றுக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, வரும் 10ம் தேதி முதல் ஜூலை 10 வரையில், ஐந்தாவது சுற்று தடுப்பூசி பணி தேசிய கால்நடைநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் போடப்படுகிறது.
மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, நகரம் மற்றும் நகராட்சிகளில் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனடிப்படையில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் சுமார் 3 லட்சம் கால்நடைகளுக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, கடலுார் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, கோமாரி தடுப்பூசி போட்டு, பயன்பெறலாம் என, கேட்டுக்கொண்டுள்ளார்.