/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் பூவராக சுவாமிக்கு திருமஞ்சனம்தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் பூவராக சுவாமிக்கு திருமஞ்சனம்
தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் பூவராக சுவாமிக்கு திருமஞ்சனம்
தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் பூவராக சுவாமிக்கு திருமஞ்சனம்
தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் பூவராக சுவாமிக்கு திருமஞ்சனம்
ADDED : பிப் 24, 2024 06:10 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் கிள்ளையில் நடக்கும் மாசி மக தீர்த்தவாரிக்கு செல்லும் பூவராகசாமிக்கு திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் இருந்து கிள்ளை கடற்கரையில் நடக்கும் மாசி மக தீர்த்தவாரிக்கு ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் உடனுறை பூவராகசாமி முதல் வழித்தடமான பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார்கோவிலில் நேற்று காலை 10.00 மணிக்கு எழுந்தருளச்செய்தனர்.
மதியம் 1.00 மணிமுதல் 2.00 மணிவரை ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், பூவராகசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பால், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையிலான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடந்து மாலை 5.00 மணியளவில் சேவை திருப்பாவை சாற்றுமுறை உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்தது.
பின்னர் இரவு 7.00 மணியளவில் பூவராகசாமி திருப்பல்லக்கில் எழுந்தருளச் செய்து, பிரபந்த சாற்றுமுறையுடன் கிள்ளை நோக்கி பெருமாள் புறப்பாடு நடந்தது.