Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பா.ம.க., வுடன் இணைய வாய்ப்பே இல்லை த.வா.க., வேல்முருகன் திட்டவட்டம் 

பா.ம.க., வுடன் இணைய வாய்ப்பே இல்லை த.வா.க., வேல்முருகன் திட்டவட்டம் 

பா.ம.க., வுடன் இணைய வாய்ப்பே இல்லை த.வா.க., வேல்முருகன் திட்டவட்டம் 

பா.ம.க., வுடன் இணைய வாய்ப்பே இல்லை த.வா.க., வேல்முருகன் திட்டவட்டம் 

ADDED : ஜூன் 06, 2025 08:11 AM


Google News
கடலுார் ;பா.ம.க., வுடன் இணைய வாய்ப்பில்லை என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., கூறினார்.

இதுகுறித்து கடலுாரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ம.க., நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் எனது சகோதரர் திருமால்வளவன் நேரில் சந்தித்தது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தற்போது ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் ராமதாஸ் மனம் வருந்தி நிருபர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டதை பார்த்த என் கட்சி நிர்வாகிகள், சகோதரர்கள், நானும் வருத்தம் அடைந்தோம்.

சமூக நீதி தளத்தில் தொடர்ந்து பா.ம.க., பயணித்து வருகிறது. இக்கட்சியில் தற்போது எற்பட்டுள்ள சிறு குழப்பம் தீர விரும்புகிறோம். மன வருத்தத்தில் இருந்த ராமதாசை, திருமால்வளவன் சந்தித்து, உங்களால் நாங்கள் வளர்க்கப்பட்டோம்; நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். அன்புமணி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நாங்கள் எங்கள் பணியை மேற்கொண்டு வருகிறோம். எங்களை வளர்த்தவர்களை சந்தித்தார். எனவே வேல்முருகன் பா.ம.க., வில் சேருகிறார் என்றும், அன்புமணிக்கு எதிர்ப்பாக ராமதாசுடன் பயணிக்க உள்ளார் என்பது உண்மைக்கு மாறான தகவல். இது தொடர்பாக வரும் தகவல் எல்லாம் வெறும் கற்பனையாகும்.

பா.ம.க., வுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி இணைவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் தமிழனாக நான் வரவேற்கிறேன். தமிழக மக்களுக்காக அரசியல் செய்யட்டும். வேண்டாம் என்ற கூறவில்லை. எடுத்த உடனேயே சட்டசபைக்கு செல்வேன் என கூறுவது ஏற்புடையது அல்ல.

உள்ளாட்சி தேர்தல், மாநகராட்சி தேர்தல் அதன் பிறகு சட்டசபை தேர்தல் என, 10 ஆண்டுகள் மண்ணுக்கும், மக்களுக்கும் பேராடட்டும். பின்னர், ஓட்டளியுங்கள் என்று கேளுங்கள். நடிப்பில் பல கோடி சம்பாதித்துவிட்டு தற்போது அரசியலுக்கு வருவேன் எனவும், கோட்டைக்குதான் போவேன் என கூறியதற்கு விமர்சனம் செய்தேன்.

திரைத்துறையில் வசனம் பேசுவதும், அதையே மூலதனமாகக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரத்துடிப்பது ஏற்புடையது அல்ல. தற்போது சினிமா மோகம் ஆட்கொண்டுள்ளது. மக்கள் கலையை கலையாக தான் பார்க்க வேண்டும்.

நடிகரை நடிகராக பார்க்க வேண்டும். நடிப்பை பாராட்ட வேண்டும். சமூக வளைதளங்களில் தேவையற்ற பேச்சுக்கள் வருவது விஜய்க்கு அழகல்ல. இதை உடனடியாக விஜய் தடுத்த நிறுத்த வேண்டும். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசி வருவது சரியல்லை என்பதை விஜய்க்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us