ADDED : ஜூன் 06, 2025 08:09 AM
கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் வரும் 8ம் தேதி, இலவச திருமண ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.
மாங்கல்யம் அறக்கட்டளை, தமிழ்நாடு பிராமணர் சங்கம், அகிலாண்டேஸ்வரி அகில பாரத விவாக கேந்திரம் இணைந்து, கடலுார் திருப்பாதிரிப்புலியூர், பாபுராவ் தெரு சங்கர பக்த ஜன சபாவில் வரும் 8ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 12:30மணி வரை இலவச திருமண ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. பங்கேற்பவர்கள் ஜாதக நகல்களை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை பிராமணர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் திருமலை தெரிவித்துள்ளார்.