/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கோவில் உண்டியல் திறப்பு ரூ. 7.50 லட்சம் வசூல் கோவில் உண்டியல் திறப்பு ரூ. 7.50 லட்சம் வசூல்
கோவில் உண்டியல் திறப்பு ரூ. 7.50 லட்சம் வசூல்
கோவில் உண்டியல் திறப்பு ரூ. 7.50 லட்சம் வசூல்
கோவில் உண்டியல் திறப்பு ரூ. 7.50 லட்சம் வசூல்
ADDED : ஜூன் 14, 2025 01:15 AM

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 7 லட்சத்து 58 ஆயிரத்து 697 ரூபாய் காணிக்கை இருந்தன.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா முன்னிலையில் தன்னார்வலர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதில், 7 லட்சத்து 58 ஆயிரத்து 697 ரூபாய் ரொக்கம், ஒரு கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளிப்பொருட்கள் காணிக்கையாக இருந்தன. மேலும், 5 திராம்ஸ், 2 ரிங்கெட் ஆகிய வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்தன.
கிழக்கு கோபுர வாசலில் திறந்தவெளி உண்டியலில் மழையால் நனைந்த ரூபாய் நோட்டுகள் உலர்த்தி, மீண்டும் எண்ணப்பட்டன.