/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 100 நாள் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு 100 நாள் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
100 நாள் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
100 நாள் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
100 நாள் திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 14, 2025 01:18 AM

விருத்தாசலம் : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப் பணிகளுக்கு கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது என விவசாயிகள் கூறினர்.
விருத்தாசலத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமையில் நடந்தது. வேளாண், கால்நடை, வேளாண் பொறியியல், வனத்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது பின்வருமாறு:
கலியபெருமாள்: நெல், முந்திரி, வாழை உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு புயல் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிவாரணம் கிடைக்காத விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடர முடியாமல் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
சக்திவேல்: விவசாய வேலைகள் துவங்கிய நேரத்தில், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணிகள் தரப்படுகிறது. இதனால் விவசாய வேலைகளுக்கு பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, 100 நாள் திட்டப் பணிகளை முறைப்படுத்த வேண்டும்.
ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மத்திய அரசு காப்பீட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. எனவே, காப்பீடு நிதியை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து: வேளாண்மை திட்டங்கள் அனைத்தும் அரசியல் பிரமுகர்களுக்கு தெரிவதுபோல, விவசாயிகளுக்கு தெரிவது கிடையாது. எனவே, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், சலுகைகள், கடனுதவி போன்றவை விவசாயிகளை சென்றடையும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா கூறினார்.