திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது
திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது
திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது
ADDED : செப் 19, 2025 03:28 AM

புதுச்சத்திரம்: திருநங்கையை திருமணம் செய்து, பணம் மோசடி செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி, 28; சென்னை தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கு, புதுச்சேரி, பொறையூர்பேட்டை சேர்ந்த திருநங்கை அனிதா, 28; என்ப வருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து அத்தியாநல்லுாரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் அனிதாவிடம் 4 லட்சம் ரூபாயை மோசடி செய்தார். இவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அனிதாவை, தாக்கி வீ ட்டை விட்டு விரட்டினார்.
புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.