/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் சிதம்பரத்தில் அன்புமணி அறிவிப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் சிதம்பரத்தில் அன்புமணி அறிவிப்பு
பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் சிதம்பரத்தில் அன்புமணி அறிவிப்பு
பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் சிதம்பரத்தில் அன்புமணி அறிவிப்பு
பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் சிதம்பரத்தில் அன்புமணி அறிவிப்பு
ADDED : செப் 19, 2025 03:29 AM
கடலுார்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மோசமான நிலையில் உள்ளதை கண்டித்து, பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் நேற்று நடந்த தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணத்தில் அவர் பேசியதாவது:
கொடுங்கோல் தி.மு.க., ஆட்சியை அகற்றியே தீருவோம் என்ற மைய நோக்கத்தோடு நுாறுநாள் நடைபயணத்தை துவக்கி உள்ளேன்.
தி.மு.க., நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தை நாசம் செய்து கொண்டிருக்கிறது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முழுமையாக அழிந்து விடும்.
இளைஞர்கள், பெண்களை காப்பாற்ற வேண்டுமென்றால் தி.மு.க.,வை அகற்ற வேண்டும்.
வீராணம் ஏரி துார்ந்து விட்டது. 90 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட ஏரியை துார்வார வேண்டும்.
என்.எல்.சி., மூன்றாவது சுரங்கத்திற்கு புவனகிரி, கம்மாபுரம் பகுதியில் 26 கிராமங்களில் 12 ஆயிரத்து 500 ஏக்கரை கையகப்படுத்தி உள்ளனர்.
பாளையங்கோட்டை, வீராணம், சேத்தியாத்தோப்பு நிலக்கரி திட்டம் என மூன்று திட்டங்களை வைத்துள்ளனர். அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரும்போது பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மோசமான நிலையில் உள்ளது. மருத்துவர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள் என எதுவுமே கிடையாது.
இதனை இரண்டு வாரத்திற்குள் சரி செய்யாவிட்டால் மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.
கடந்த மாதம் 207 அரசு பள்ளிகளை மூடினர். உயர்கல்வித்துறையில் 10ஆயிரத்து 500 பேராசிரியர்களுக்கு ஆயிரத்து 500 பேர் தான் பணிபுரிகின்றனர். 9 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பொய் பிரசாரம் செய்து ஆட்சியை நடத்துகின்றனர்.
புவனகிரி கடல்நீர் உட்புகுவதை தடுக்க முகத்துவாரத்தில் சிறிய தடுப்பணை கட்டினால் போதும், அதைக்கூட செய்ய முடியாத ஆட்சியாக தி.மு.க., உள்ளது.
தடுப்பணை கட்டினால் மணலை கொள்ளையடிக்க முடியாது என்பதால் கட்டுவதில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடை காப்பாற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
வன்னியர்களுக்கு கொடுக்க வேண்டிய 10.5 சதவீத இடஒதுக்கீடு தர முதல்வர் ஸ்டாலின் மறுக்கிறார்.
இதனை கண்டித்து டிச., 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.