UPDATED : ஜன 11, 2024 01:52 PM
ADDED : ஜன 11, 2024 04:26 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுவர் தினமான வரும் 16ம் தேதி, தைப்பூசமான 25 ம் தேதி மற்றும் 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் கடலுார் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
மேலும், எப்.எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும்.
மீறி, மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமதாரர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினங்களை ஒட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் செயல்படாது என மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.