/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறுதானிய உணவுக்கு மாறுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'சிறுதானிய உணவுக்கு மாறுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
சிறுதானிய உணவுக்கு மாறுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
சிறுதானிய உணவுக்கு மாறுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
சிறுதானிய உணவுக்கு மாறுங்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் 'அட்வைஸ்'
ADDED : ஜன 29, 2024 04:51 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில், சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழா, ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு கட்டடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் சிறுதானிய கண்காட்சி துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை தாங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம், லால்கான் தெருவில், 5.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறுதானிய கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டுடார்.
மாவட்டம் முழுதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்களால் சிறுதானியங்கள் மூலம் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அமைச்சர், வகைகளைக் கேட்டறிந்து சாப்பிட்டு பார்த்து பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து நடந்த விழாவில் அவர் பேசுகையில், 'சிறுதானிய உணவு வகைகளை நாம் மறந்து போனதால்தான் நோயாளிகளானோம், வரும் காலங்களில் மீண்டும் சிறுதானிய உணவு வகைகளை உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும். அதனால் எல்லோரும் சிறுதானிய உணவுக்கு மாறுங்கள்' என்றார்.
கலெக்டர் அருண் தம்புராஜ், சிதம்பரம் நகர மன்ற தலைவர் செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் சரண்யா, சிதம்பரம் சப் கலெக்டர் ரஷ்மிராணி, எஸ்.பி., ராஜாராம், துணை பதிவாளர் ரங்கராஜ் , தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.