/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல் உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மறியல்
ADDED : செப் 04, 2025 07:10 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி, கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லுாரியில், மங்கம்பேட்டை, உளுந்துார்பேட்டை, திட்டக்குடி, கம்மாபுரம், வேப்பூர், வடலுார் மற்றும் அதனை சுற்றியுள் கிராமபுற பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், கல்லுாரி நேரங்களில் விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை மார்க்கமாக கூடுதல் டவுன் பஸ் இயக்க கோரி, நேற்று பகல் 1:00 மணியளவில் கல்லுாரி முன்பு, விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில், மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், மாணவர்களிம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், பகல் 1:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.