ADDED : செப் 05, 2025 03:25 AM
புவனகிரி: மேல்புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாமணி, வருவாய் ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் பழனிஇளங்கோவன் வரவேற்றார். நெய்வேலி நில எடுப்பு பிரிவு தாசில்தார் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.