ADDED : செப் 05, 2025 03:25 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாலத்தில் மணல் குவிந்து கிடப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. வாகனங்களில் ஒட்டிக் கொண் வரும் மணல் பாலத்தின் இருபுறமும் குவிந்து கிடக்கிறது. இதனை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றாததால் நாளுக்கு நாள் மணல் குவியல் அதிகமாக உள்ளது. காற்று வீசும் போது, மணல் பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலையோர மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.