/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : மே 31, 2025 11:49 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,ஜெயக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று திடீரென எஸ்.பி.,ஜெயக்குமார் வருகை தந்தார்.
அப்போது, போலீஸ் ஸ்டேஷன் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், நிலுவை வழக்குகள், பதிவான வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.
போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருபவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் அலைகழிக்க வைக்கக் கூடாது. அவர்களின் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். கோர்ட்டில் ஆஜராகாத குற்றவாளிகளை பிடித்து ஆஜர்படுத்த வேண்டும். சாராயம், கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும். இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
வழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் ரவிச்ந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் உடனிருந்தனர்.