ADDED : மே 31, 2025 11:48 PM

மந்தாரக்குப்பம்: ஊமங்கலம் அருகே அரசு பஸ் தடுப்பு சுவரில் மீது மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.
விருத்தாசலத்தில் இருந்து கடலுாருக்கு டி.என். 32, என் 4208 என்ற அரசு பேருந்து நேற்று காலை 9:00 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலம், அரசக்குழியைச் சேர்ந்த முருகன், 54; ஓட்டினார்.
ஊமங்கலம் அடுத்த வேப்பங்குறிச்சி பாலத்தில் பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பஸ்சின் முன்பகுதி சேதமானது தெரிந்தது.
விபத்தில் டிரைவர் முருகன் 54; கோபாலபுரம் பிரியா 28; கோனுார் பாக்கியலட்சுமி,45; கோாழிப்பட்டு ராமதாஸ்,39; குணமங்கலம்திருநாவுக்கரசு 40; சுப்பிரமணியன், 70; உட்பட 14 பேர் காயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.