/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி விற்பனை எதிரொலி போலீசாருக்கு எஸ்.பி., 'செக்' லாட்டரி விற்பனை எதிரொலி போலீசாருக்கு எஸ்.பி., 'செக்'
லாட்டரி விற்பனை எதிரொலி போலீசாருக்கு எஸ்.பி., 'செக்'
லாட்டரி விற்பனை எதிரொலி போலீசாருக்கு எஸ்.பி., 'செக்'
லாட்டரி விற்பனை எதிரொலி போலீசாருக்கு எஸ்.பி., 'செக்'
ADDED : செப் 10, 2025 08:20 AM
சிதம்பரம் நகரம், லாட்டரி சீட்டு விற்பனையில் ஒரு கோட்டையாக விளங்கியது. சட்டம் ஒழுங்கில் மட்டும் சரியாக வைத்துக் கொண்டு சமுதாயத்தை சீரழிக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரியை போலீசார் சுதந்திரமாக அனுமதித்துள்ளனர்.
லாட்டரி சீட்டை தற்போது கூலி வேலை பார்க்கும் பெண்களும் அதிகளவில் வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர். வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ரக் கார்க் ரகசிய உத்தரவின்பேரில், எஸ்.பி., யின் தனிப்படை போலீசார் சிதம்பரம் நகரில் நடக்கும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் வேவு பார்த்து ஐ.ஜி., அலுவலகத்திற்கு தகவல் அளித்ததன் பின்னணிதான் சிதம்பரம் போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டதற்கு காரணம். இன்னும் இது தொடர்பாக ரகசிய விசாரணை நடந்து வருகிறது.
இச்சம்பவத்தால் மற்ற சப் டிவிஷன் போலீசார் கலக்கத்தில் உள்ளனர். மணல் திருட்டு, சட்ட விரோத செயலில் பணம் கொழிக்கும் போலீசாருக்கு எஸ்.பி., ஜெயக்குமார் 'செக்' வைத்துள்ளார். தவறு செய்யும் போலீசாரை தண்டிக்க தவறாத அவர் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டவும் தவறுவதில்லை.