/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மேலிட பொறுப்பாளர் தடாலடி பேச்சு விருதைக்கு காங்., குறி: தி.மு.க., 'ஷாக்' மேலிட பொறுப்பாளர் தடாலடி பேச்சு விருதைக்கு காங்., குறி: தி.மு.க., 'ஷாக்'
மேலிட பொறுப்பாளர் தடாலடி பேச்சு விருதைக்கு காங்., குறி: தி.மு.க., 'ஷாக்'
மேலிட பொறுப்பாளர் தடாலடி பேச்சு விருதைக்கு காங்., குறி: தி.மு.க., 'ஷாக்'
மேலிட பொறுப்பாளர் தடாலடி பேச்சு விருதைக்கு காங்., குறி: தி.மு.க., 'ஷாக்'
ADDED : செப் 10, 2025 08:20 AM
க டந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையில் 25 தொகுதிகளில் களமிறங்கிய காங்., வேட்பாளர்கள் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதுார், சோளிங்கர், ஈரோடு (கிழக்கு), ஊட்டி, விருத்தாசலம், அறந்தாங்கி, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, கிள்ளியூர், தென்காசி, கொளச்சேரி, வேளச்சேரி, மயிலாடுதுறை, விளவங்கோடு ஆகிய 18 தொதிகளில் வெற்றி பெற்றனர்.
இதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., போட்டியிட பகீரத முயற்சி மேற்கொண்டபோதும், அப்போதைய மாநில தலைவர் அழகிரி முயற்சியால் தடையானது.
அதன்பின், மாநில தலைவர் மாற்றத்தால், வரும் 2026 தேர்தலில் எப்படியாவது தொகுதியை கைப்பற்றிடலாம் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தே.மு.தி.க., கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு பரவியதால், விஜயகாந்த் முதன்முதலாக வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதி கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் திருநெல்வேலியில் நடந்த காங்., சார்பில் நடந்த மாநாட்டில், அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'வரும் தேர்தலில் 125 தொகுதிகளில் காங்., போட்டியிட வேண்டும்' எனவும்;
சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார், 'காங்., துணையின்றி எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது' எனவும் பேசினர். இவர்களது பேச்சால் தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, காங்., கட்சி குறைந்தது 50 தொகுதிகளை கேட்டுப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கொடுத்த 18 தொகுதிகளை மீண்டும் கேட்டுப் பெறலாம் என பேசப்படுகிறது. இதன் மூலம் விருத்தாசலம் தொகுதியை மீண்டும் கேட்டுப்பெறும் வாய்ப்பு உருவாகலாம் என்பதால், அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.