/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மார்க்கெட் கமிட்டியில் எள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு மார்க்கெட் கமிட்டியில் எள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு
மார்க்கெட் கமிட்டியில் எள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு
மார்க்கெட் கமிட்டியில் எள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு
மார்க்கெட் கமிட்டியில் எள் ஏலம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 13, 2025 03:40 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மார்க்கெட் கமிட்டியில் பருத்தி, எள் ஆகியவற்றை விற்று பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மார்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேத்தியாத்தோப்பு மிராளூரில் தமிழக அரசின் மாரக்கெட் கமிட்டியில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம் உள்ளிட்ட வட்டாரங்களில் விளையும் பருத்தி, எள் ஆகியற்றிற்கான ஏலம் வரும் 18ம் தேதி துவங்கி ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை நடக்கிறது.
விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தி, எள் ஆகியவற்றை கொண்டு வந்து மார்க்கெட் கமிட்டியில் நடக்க உள்ள மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து கொள்ளலாம். எனவே, விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகலை இ-நாம் ஆப்பில் பதிவு செய்து தங்களது விளைபொருட்களை சரியான எடை மற்றும் அதிக லாபத்தில் விற்று பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 9843137979, 9965435999 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.