/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இயற்கை பஞ்சகவ்யம் செயல்முறை விளக்கம் இயற்கை பஞ்சகவ்யம் செயல்முறை விளக்கம்
இயற்கை பஞ்சகவ்யம் செயல்முறை விளக்கம்
இயற்கை பஞ்சகவ்யம் செயல்முறை விளக்கம்
இயற்கை பஞ்சகவ்யம் செயல்முறை விளக்கம்
ADDED : ஜூன் 13, 2025 03:41 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் கிராமத்தில் மருந்தில்லா உணவு விவசாயத்திற்கான இயற்கை வேளாண் பஞ்சகவ்யம் தயாரிப்பு செயல்விளக்க பயிற்சி வகுப்பு நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் அறிவியல் நிலைய மேற்பார்வையாளர் இளங்கோவன் தலைமை தாங்கி பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற இயற்கை அங்கக வேளாண் விவசாயி ராமதாஸ், பஞ்சகவ்யம் தெளிப்பு முறையால் நெல்வயலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
நெல், கரும்பு, கம்பு, சோளம், போன்ற பயிர்களுக்கு ரசாயன மருத்தினை தெளிப்பதை தவிர்த்து இயற்கை முறையில் நாட்டு மாடு சானம், கோமியம், நெய், தயிர், பால் ஆகிய ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சகவ்யம் தயாரிப்பு முறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் அறிவியல் நிலைய களப்பணியாளர் பாலமுருகன் செய்திருந்தார்.