/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாலை அமைக்க வலியுறுத்தி செம்மேடு கிராம மக்கள் மனுசாலை அமைக்க வலியுறுத்தி செம்மேடு கிராம மக்கள் மனு
சாலை அமைக்க வலியுறுத்தி செம்மேடு கிராம மக்கள் மனு
சாலை அமைக்க வலியுறுத்தி செம்மேடு கிராம மக்கள் மனு
சாலை அமைக்க வலியுறுத்தி செம்மேடு கிராம மக்கள் மனு
ADDED : பிப் 06, 2024 06:03 AM

கடலுார் : செம்மேடு கிராமத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் மனு அளித்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பண்ருட்டி தாலுகா செம்மேடு கிராம மக்கள் அளித்த மனு:
பண்ருட்டி அடுத்த செம்மேடு-எலந்தம்பட்டு கிராமத்திற்கு இடையே உள்ள தார் சாலை சேதமடைந்து காணப்பட்டது.
இச்சாலையை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்ல பயன்படுத்தினர். தற்போது இந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே சிலர் சாலை அமைக்க விடாமல் தடுத்து பொக்லைன் இயந்திரம் மூலமாக மண் கொட்டியுள்ளனர். இதனால், விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.