/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு
கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு
கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு
கிருஷ்ணசாமி கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : செப் 21, 2025 06:24 AM

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறையின் சங்க துவக்க விழா, கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், அறக்கட் டளை செயலர் விஜயகுமார் தலைமை தாங்கினர்.
முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர்.
சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் துறை திட்ட மேலாளர் கோபிநாத் பாஸ்கரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று செயற்கை நுண்ணறிவு, தரவியல் அறிவிய லின் எதிர்காலம் என்ற தலைப்பில், 'தொழில் மேம்பாட்டில் புதிய பாதையை ஆராய்தல், நிறுவனங் கள் தேவைகள் மற்றும் நுண்ணறிவு மின்வலையின் எதிர்காலம்' குறித்து பேசினார்.
முன்னதாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறைக்கான புதிய சங்க துவக்க விழா நடந்தது.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், துணை பேராசிரியை ஹனிப்ரியா செய்திருந்தனர்.