/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : செப் 21, 2025 06:21 AM

சிறுபாக்கம் : விருத்தாசலத்தில் நடக்கும் தி.மு.க., பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் கூறினார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
தி.மு.க., சார்பில் 'மண், மொழி, மானம் காக்க-ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் இன்று (21ம் தேதி) மாலை 6:00 மணிக்கு விருத்தாசலம் வானொலி திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
எனது தலைமையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் பத்மப்பிரியா பேசுகிறார்.
பொதுக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.