Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புத்தேரி விநாயகருக்கு  சங்கடஹர சதுர்த்தி பூஜை

புத்தேரி விநாயகருக்கு  சங்கடஹர சதுர்த்தி பூஜை

புத்தேரி விநாயகருக்கு  சங்கடஹர சதுர்த்தி பூஜை

புத்தேரி விநாயகருக்கு  சங்கடஹர சதுர்த்தி பூஜை

ADDED : ஜூன் 14, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
திட்டக்குடி: புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.

திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு சங்கடஹர சதுர்த்தியொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

10:45 மணிக்கு பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், 11:00 மணிக்கு அருகம்புல் மாலை சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

இதேப் போன்று, திட்டக் குடி வைத்தியநாத சுவாமி, திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us