Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ.32 லட்சம் மோசடி : சென்னை ஆசாமி கைது

ரூ.32 லட்சம் மோசடி : சென்னை ஆசாமி கைது

ரூ.32 லட்சம் மோசடி : சென்னை ஆசாமி கைது

ரூ.32 லட்சம் மோசடி : சென்னை ஆசாமி கைது

ADDED : செப் 12, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரிடம், கார் வாங்கி விற்பதாகக்கூறி ரூ. 32.75 லட்சம் மோசடி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வடலுார் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ்,34; இவர் தனக்கு சொந்தமான காரை விற்க முயன்ற போது, அதே ஊரைச் சேர்ந்த தமிழ் என்பவர் மூலம், சென்னை எஸ்.பி., கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சென்னை கே.கே., நகர் பூபதி மகன் தமிழரசன் அறிமுகமானார்.

தமிழரசன், தினேஷின் காரை பார்வையிட்டு 18 லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தருவதாக கூறி காரை எடுத்து சென்றார்.

அதன் மூன்று தவணையாக மொத்தம் 85 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, மீதிப்பணம் 17 லட்சத்து 15ஆயிரம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்தார்.

இதனால் தினேஷ், சென்னை யிலுள்ள எஸ்.பி.,கார்ஸ் நிறுவனத் திற்கு நேரில் சென்ற போது, கார் எதுவும் இல்லாமல் நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

இதேபோல், காட்டுமன்னார்குடி மெய்யாத்துாரைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்பவரிடம் வாகனம் வாங்கி தருவதாக 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், சிதம்பரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் காரை விற்று தருவதாகக் கூறி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், வல்லம்படுகை மணி என்பவரின் காரை விற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது.

மொத்தம் 32 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு காரை ஏமாற்றி எடுத்து சென்ற தமிழரசனை கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us