/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வளர்ச்சி திட்ட பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள் பண்ருட்டியில் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 12, 2025 05:17 AM

பண்ருட்டி, செப். 12-
பண்ருட்டி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சைபிரிவு, சித்த மருத்துவ பிரிவு, ஆய்வகம் ஆகியவற்றை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்து, நோயாளிகள் எண்ணிக்கை, மருந்து இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
பின், 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். பண்ருட்டி அரசு மேல் நிலை பள்ளியில் கற்றலைத் தேடி திட்டத்தின் கீழ் வகுப்புகளை ஆய்வு செய்தார்.
பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டட பணியை ஆய்வு செய்தார்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலைஞர் வீடு கட்டும் திட்டம், திருவாமூர்- சோமாசிப்பாளையம் சாலையில் மலட்டாற்றின் குறுக்கே 8.13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
பணிகைளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுகாதார இணை இயக்குநர் மணிமேகலை, பி.டி.ஓ.,க்கள் மீராகோமதி, பாபு, துணை பி.டி.ஓ., தேன்மொழி, மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டி உடனிருந்த னர்.