/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டி அருகே வழிப்பறி: ஒருவர் கைதுபண்ருட்டி அருகே வழிப்பறி: ஒருவர் கைது
பண்ருட்டி அருகே வழிப்பறி: ஒருவர் கைது
பண்ருட்டி அருகே வழிப்பறி: ஒருவர் கைது
பண்ருட்டி அருகே வழிப்பறி: ஒருவர் கைது
ADDED : ஜன 07, 2024 04:52 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். 4 பேரை தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் விஜயகுமார்,25; பலாப்பழ வியாபாரி; இவர், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து பஜாஜ் பல்சர் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மேல்காங்கேயன்குப்பம் அருகே சென்றபோது, பேர்பெரியான்குப்பம் கந்தன் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் அசோக்குமார், தென்னரசு, சுரேஷ், சிவமணிகண்டன், பாண்டியன் மகன் ஹரிஹரன் ஆகிய 5 பேர் விஜயகுமாரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாய் பணம் மற்றும் பைக்கை பிடுங்கி கொண்டு கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிஹரன்,23; என்பவரை கைது செய்தனர்.
மேலும் தப்பியோடிய அசோக்குமார், தென்னரசு, சுரேஷ், சிவமணிகண்டன் ஆகியோரை தேடிவருகின்றனர்.