/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீசை கண்டித்து மறியல் மந்தாரக்குப்பத்தில் பரபரப்புபோலீசை கண்டித்து மறியல் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
போலீசை கண்டித்து மறியல் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
போலீசை கண்டித்து மறியல் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
போலீசை கண்டித்து மறியல் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
ADDED : பிப் 11, 2024 02:01 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் போலீசில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்த விவகாரத்தில், போலீஸ் ஒருதலை பட்சமாக நடப்பதாக கூறி, வாலிபர் தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மகளை காணவில்லை என, மந்தாரக்குப்பம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதற்கிடையே நேற்று மாலை, அதே பகுதியை சேர்ந்த வாலிபரும், அந்த பெண்ணும் திருமண கோலத்தில் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இரு தரப்பு பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து வெளியே அனுப்பினர்.
அப்போது, வாலிபருக்கு ஆதரவாக வந்திருந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு வரை சென்றது.
இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர், போலீசை கண்டித்து, போலீஸ் நிலையம் முன்பு, கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சபியுல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, 6.10 மணிக்கு மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.