/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : செப் 04, 2025 06:57 AM

கடலுார்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று துவக்கியதால் பணிகள் முடங்கியது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார் பில், கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும், 97 பேரிடர் மேலாண்மை பிரிவு பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்திட போதிய நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சான்றிதழ் மற்றும் அரசின் சிறப்புத்திட்ட பணிகளை மேற்கொள்ள தாலுகாவில் புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 48மணி நேர வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கடலுார் மாவட்ட தலைவர் மகேஷ், செயலர் ரத்தினகுமரன், பொருளாளர் ஸ்ரீதரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கமான பணிகள் முடங்கியது.
இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.