/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிவலோகநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் சிவலோகநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சிவலோகநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சிவலோகநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
சிவலோகநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 04, 2025 06:57 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேகம் விழா துவங்கியது.
கடந்த 2 ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 2ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடந்தது.இன்று (4ம் தேதி) காலை நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹீதி தீபாரா தனையும் நடக்கிறது.
காலை 8 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து 9.40 மணிக்கு ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாலை திருக்கல்யாணமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.சேனாபதி,வாகீசன் குருக்கள் தலைமையில் பூஜைகள் நடக்கிறது.