ADDED : ஜன 05, 2024 12:21 AM
கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றார். பாலகிருஷ்ணன், பாஸ்கரன், கணேசன் சிறப்புரையாற்றினர். இதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இறந்த குடும்பத்திற்கு குடும்ப நல நிதியை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.