/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடிரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிலங்கள் மீட்பு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி
ADDED : பிப் 24, 2024 06:27 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 8 ஏக்கர் 19 சென்ட் பரப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பக்தர்கள், பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூரில் ஆயிரத்து ஐநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கந்தசஷ்டி 8 நாள் திருவிழா, நவராத்தி விழா, மார்கழி மாதம் சிறப்பு வழிபாடு மற்றும் மாத, வார, தினசரி சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
கோவிலுக்கு சொந்தமாக இறையூர், தொளார் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்ளன. இதன் மூலம் கோவிலுக்கு கனிசமான தொகை வந்தது. கோவிலுக்கு மற்ற கிராமங்களிலும் நிலங்கள் உள்ளதா என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் கிராமத்தில் சர்வே எண் 205ல், 8 ஏக்கர் 19 சென்ட் பரப்பிலான விளை நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலங்களில் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து நெல் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து, கண்டெடுக்கப்பட்ட நிலங்களை அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர்கள் மகாதேவி, சிவக்குமார், ஆய்வர் தமிழ்ச்செல்வி, நில அளவர்கள் முத்தையா, கிருபா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் அளவீடு செய்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் என அறிவிப்பு பலகை வைத்தனர்.
கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெண்ணாடம் பகுதி பொது மக்கள், பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி கூறியதாவது, 'இந்த நிலங்கள் பல ஆண்டுகளாக கோவில் அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்ளது. தற்போது அரசு உத்தரவின்பேரில், கோவில் நிலங்கள் தொடர்பாக ஆய்வு செய்தோம். அதில், இங்கு கோவில் நிலம் இருப்பது தெரிந்தது. ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 8 ஏக்கர் 19 சென்ட் பரப்பிலான விளைநிலங்களை புதிதாக பொது ஏலம் விட்டு, கோவிலுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.