/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ரத்தனா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
ADDED : மே 19, 2025 06:41 AM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் மாணவி பாக்கியலட்சுமி 484 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்திலும், மாணவி லதீஷா 483 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும்,மாணவிகள் திவ்யா, கனிஷ்கா 477 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்திலும்,ஜனனி 476 மதிப்பெண்கள், துளசிவாசன் 476 மதிப்பெண்களு,கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி மரியா அனிதா 475 மதிப்பெண்களும்,அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளையும் மற்றும் ஆசிரியர்களையும் பள்ளியின் நிறுவனர் மாயகிருஷ்ணன்,தாளாளர் ராமகிருஷ்ணன்,பள்ளி முதல்வர் ரவி, பள்ளி இயக்குநர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டினர்.