/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு
கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு
கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு
கிணற்றில் விழுந்த மான் இறந்த நிலையில் மீட்பு
ADDED : மே 19, 2025 06:41 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தரைக்கிணற்றில் தவறி விழுந்த ஆண் மானை தீயணைப்புத் துறையினர் இறந்த நிலையில் மீட்டனர்.
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், பாபுஜி நகர் அருகே உள்ள விளை நிலத்தில் பாழடைந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று பகல் 1:00 மணியளவில் ஆண் மான் ஒன்று விழுந்து கிடப்பதாக விருத்தாசலம் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் வனக்கோட்ட வனவர் சிவக்குமார் தலைமையில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் 2 வயதுடைய மானை இறந்த நிலையில் மீட்டனர்.