/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு கல்லுாரியில் வினாடி - வினா போட்டி அரசு கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
அரசு கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
அரசு கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
அரசு கல்லுாரியில் வினாடி - வினா போட்டி
ADDED : செப் 13, 2025 06:56 AM

சிதம்பரம்: காட்டுமன்னார் கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த வினாடி வினா போட்டி நடந்தது.
கல்லுாரியின் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கி, போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.
கணினி அறிவியல் துறை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
மாணவ, மாணவிய ர் தாங்கள் உருவாக்கிய போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பாடல்களை பாடினர். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி நடந்தது. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இணை ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.