/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் கல்விக்கடன் முகாம் : மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி வழங்கல் கடலுாரில் கல்விக்கடன் முகாம் : மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி வழங்கல்
கடலுாரில் கல்விக்கடன் முகாம் : மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி வழங்கல்
கடலுாரில் கல்விக்கடன் முகாம் : மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி வழங்கல்
கடலுாரில் கல்விக்கடன் முகாம் : மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி வழங்கல்
ADDED : செப் 13, 2025 06:58 AM

கடலுார் : கடலுாரில் 55 கல்லுாரி மாணவர்களுக்கு ரூ. 2.52 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டது.
கடலுார், கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜசேகரன் தலைமை தாங்கி, 55 மாணவர்களுக்கு 2.52 கோடி ரூபாய் கல்விக்கடனுக்கான அனுமதி ஆணை வழங்கினார்.
பின், அவர் பேசுகையில் , 'மாணவர்கள் தங்களது உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதல்வரின் உத்தரவிற்கிணங்க கடலுார் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் அனைத்து கல்லுாரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது.
அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர் தனியார் துறையில் கூடுதல் மதிப்பெண் பெற்று பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்வதோடு முகாமில் பங்கேற்றுள்ள வங்கியாளர்களை நேரில் அணுகி கல்விக்கடனை பெற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்விக்கடன் முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி உயர்கல்வி கனவை அடைந்து வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.