/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதுப்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி புதுப்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
புதுப்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
புதுப்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
புதுப்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 04:03 AM
நடுவீரப்பட்டு: புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 44 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி அளவில் மாணவி சக்தி 466 மதிப்பெண், பிரியதர்ஷினி 447 மதிப்பெண், மாணவர் அருள்ராஜன் 444 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு அரசு பொதுதேர்வில் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
மாணவிகள் சாக்ஷி 475 மதிப்பெண், யமுனா 464, சஞ்சனா 460 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 90 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவர்கள் இளந்திரையன் 464, அருளன் 462, மாணவி ஸ்ரீசக்திலேகா 459 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி 84 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவிகள் லாவண்யா 440, ஹரிணி 425, அனுசியா, ரண்யா இருவரும் தலா 418 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
பாலுார் அரசுமேல்நிலைப்பள்ளி 75 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவிகள் அட்சயா 462, தாரணி 428, புவனேஸ்வரி 422 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.