/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்
ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்
ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்
ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்
ADDED : ஜன 06, 2024 05:10 AM

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே மாரடைப்பால் இறந்த ஏட்டு குடும்பத்திற்கு, சக போலீசார் சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது.
பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் சிங்காரவேல், 40; பண்ருட்டி டி.எஸ்.பி.,அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.
இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், 9 வயதில் மகன் தர்ஷன் மகன், 6 வயதில் மகள் கனிஷ்கா உள்ளனர். உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு, சக போலீசார் சார்பில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். இந்நிதியை எஸ்.பி., ராஜாராம், இறந்த ஏட்டு சிங்காரவேல் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் வழங்கினார். டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.