/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல் போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல்
போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல்
போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல்
போராட்டம் எதிரொலி தரமான அரிசி வழங்கல்
ADDED : செப் 20, 2025 07:03 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், முள்ளிகிராம்பட்டு ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் ஊழியர் சக்திவேலுவிடம் வாக்குவாதம் செய்து, கடைக்குள் வைத்து பூட்டினர்.
வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி, தரமான அரிசி வழங்குவதாக கூறியதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, நேற்று ஆர்.டி.ஓ., அபிநயா முன்னிலையில், மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டது.