/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கடலுார் எம்.பி., ஆய்வு ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கடலுார் எம்.பி., ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கடலுார் எம்.பி., ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கடலுார் எம்.பி., ஆய்வு
ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதி கடலுார் எம்.பி., ஆய்வு
ADDED : செப் 20, 2025 07:04 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்வது மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து எம்.பி., விஷ்ணுபிரசாத் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில், பெண்ணாடம் ரயில் நிலையம் வழியாக விழுப்புரம் - மதுரை; திருப்பாதிரிபுலியூர் - திருச்சி பாசஞ்சர் ரயில்களும், சென்னை - குருவாயூர்; குருவாயூர் - சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் இங்கு நின்று செல்கின்றன.
பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனில் வைகை, ராக்போர்ட் மற்றும் வாராந்திர ரயில்கள் அனந்தபுரி, கன்னியாகுமரி, அவுரா, நிஜாமுதீன் உளளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, எம்.பி., விஷ்ணுபிரசாத் நேற்று காலை பெண்ணாடம் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு செய்தார். அப்போது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ரயில் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஏதுவாக நடைமேடைகளை உயர்த்தி அமைக்குமாறு ரயில்வே அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின், அவர், கூறுகையில், 'இங்கு, வைகை, அனந்தபுரி, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் பேசுவேன்' என்றார்.
தொடர்ந்து, திட்டக்குடி அடுத்த வெலிங்டன் நீர்த்தேக்கத்தை பார்வையிட்டு, நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு, தன்மைகள் குறித்து நீர்வளத்துறை பொறியாளர் சுதர்சனிடம் கேட்டறிந்தார்.