/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுஅரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 29, 2024 04:22 AM
குள்ளஞ்சாவடி : அரசுப் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை சரிந்து வருவதை தடுப்பதற்கு, தம்பிப்பேட்டைபாளையம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய ஊராட்சி தலைவர் தேன்மொழி குமரகுரு, மாணவர் சேர்க்கை அதிகமானால் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இரு தினங்களுக்கு முன் நடந்த குடியரசு தின விழாவில், த.பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிதாக சேர்ந்த, 22 மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது. கருப்பன்சாவடி பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தோப்புக்கொல்லை மற்றும, த.பாளையம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஊராட்சி தலைவர் தேன்மொழி குமரகுரு, ஊராட்சி துணை தலைவர் அசோக்குமார், செயலர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.