/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெயர் பலகையில் போஸ்டர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை பெயர் பலகையில் போஸ்டர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
பெயர் பலகையில் போஸ்டர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
பெயர் பலகையில் போஸ்டர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
பெயர் பலகையில் போஸ்டர் அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : செப் 15, 2025 02:27 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் நெடுஞ்சாலைத் துறை பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராம சாலையின் ஓரத்தில் ஊர் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பலகை வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் எளி தில் ஊரை தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது.
நடுவீரப்பட்டு பகுதிகளில் ஊர் பலகை பெயரில் திருமணம், திருமண வரவேற்பு, பிறந்த நாள், கண்ணீர் அஞ்சலி எனல, போஸ்டர்களை ஒட்டி வைப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வருவோர், குறிப்பிட்ட ஊருக்கு செல்ல இடம் தெரியாமல் குழப்பம் ஏற்படுகிறது.
எ னவே, ஊர் பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டுவதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.